மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி காங்கிரஸ் கூட்டணி சக்கரங்கள், பிரேக் இல்லாத ஒரு வாகனம் என விமர்சனம் செய்தார்.
மகாராஷ்டிராவில் வருகிற 20 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் பாஜக கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் பிரசாரத்தை தீவிரமாக்கி உள்ளன. பிரதமர் மோடி துலேயில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவுக்கு வாக்கு சேகரித்தர். அப்போது காங்கிரஸ் கூட்டணியை சரமாரியாக தாக்கியவர், மாநிலத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சண்டை நடப்பதாக விமர்சித்தார். காங்கிரஸ் கூட்டணியே சக்கரங்கள், பிரேக் இல்லாத வாகனம், அந்த வாகனத்தில் டிரைவராக இருப்பது யார் என்று சண்டை வேறு நடக்கிறது என விமர்சனம் செய்தார். காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றை நோக்கம் மக்களை கொள்ளையடிப்பது மட்டுமே என்ற பிரதமர் மோடி, அவர்கள் மாநில வளர்ச்சிக்கு தடையே என தாக்கினார். நாட்டை உடைக்கும் சதிகளில் காங்கிரஸ் எப்போதும் அங்கம் வகிக்கிறது என காட்டமாக தாக்கியவர், எஸ்.டி., எஸ்.சி. மற்றும் ஒ.பி.சி. சமூகத்தினரை ஒருவருக்கு ஒருவர் எதிராக திருப்பி விடுகிறது என குற்றம் சாட்டினார்.