நாடாளுமன்ற தேர்தலில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, திமுக 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. திருவள்ளூர் அல்லது தென்காசி, வடசென்னை, தென் சென்னை மத்திய சென்னை,ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல் அல்லது தேனி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடலாம் என கூறப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை அல்லது கடலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகள் போட்டியிலாம் என தெரிகிறது. மதிமுகவுக்கு திருச்சி தொகுதியும், இந்தியன் யூனின் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரமும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.