அண்ணாவின் கொள்ளு பேத்தி திருமண வரவேற்பு விழா - நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் அண்ணாவின் கொள்ளுப்பேத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அண்ணாவின் வளர்ப்பு மகனான பரிமளத்தின் பேத்தியும், அண்ணாவின் கொள்ளுப்பேத்தியுமான ஐஎஃப்எஸ் அதிகாரி பிரித்திகா ராணிக்கும், துணை ஆட்சியரான சித்தார்த் பழனிச்சாமிக்கும் கடந்த 7ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக, எம்.பி.க்கள், வைகோ, ஆ.ராசா, தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் பரந்தாமன், எழிலரசன் மற்றும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.