``கிடைக்காவிட்டால்..'' அண்ணாமலை பரபரப்பு ட்வீட் | Annamalai | BJP

Update: 2024-12-09 13:32 GMT

கல்வியாண்டு தொடங்கி ஆறு மாதங்களாகியும், தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பள்ளிக் குழந்தைகளுக்கான சீருடைகளும், பயிற்சிப்

புத்தகங்களும் இன்னும் வழங்கப்படவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ஏழை, எளிய பின்புலத்தில் இருந்து வரும் குழந்தைகள், அடிப்படைக் கல்வியும், சிந்தனைத் திறனும், கல்வியில்

சம வாய்ப்பும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட அங்கன்வாடி மையங்களில் அடிப்படைப் பயிற்சி கிடைக்கவில்லை என்றால், பள்ளிக் கல்வி கற்றலில் குழந்தைகள் பின்தங்கவும் வாய்ப்புள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்