மின் கட்டணத்தை உயர்த்தி, வருவாயை உயர்த்தியபோதிலும் 6 ஆயிரத்து 920 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுவதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்வாரியத்தில் இழப்பு தொடர்வதற்கு ஊழல்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். நிலுவையில் உள்ள மின்திட்டங்களை செயல்படுத்தினால் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக லாபம் ஈட்ட முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தனியாரிடம் வாங்கும் மின்சாரத்தின் விலை 49.33 சதவீதம் உயர்ந்தது குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.