தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகித விவரங்களில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி, இந்தியா கூட்டணி பிரதிநிதிகள், தேர்தல் அதிகாரிகளை சந்திதனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகித விவரங்களில் குளறுபடி உள்ளதாக 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 'இந்தியா' கூட்டணி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், 'இந்தியா' கூட்டணி கட்சியின் பிரதிநிதிகள்,
டி.ஆர்.பாலு, சல்மான் குர்சித், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி,
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக மொத்தம் ஆயிரத்து 520 புகார்கள், அனைத்துக் கட்சிகளாலும் ஒன்றாக கொடுக்கப்பட்டதாகவும், ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.