"ஜல்லிக்கட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிடுக" - விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

Update: 2025-03-20 02:30 GMT

தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் சாகுபடி பரப்பளவை உயர்த்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டு 1650 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டதாகவும் கூறிய அவர், திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை என விமர்சித்தார். தொடர்ந்து, காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு திமுக ஆட்சியில் ஒதுக்கப்படாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கடனை குறைப்போம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மூச்சு முட்டும் அளவுக்கு தமிழக அரசு கடன் வாங்கி உள்ளதாகவும், தனி மனிதன் ஒருவருக்கு ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாகவும் கூறினார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் கபடி போட்டிகளில் வீரர்கள் மரணம் அடையும் பட்ச​த்தில் அவர்களது குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் அரசின் சார்பாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்