கூட்டணி உடைந்தால் முதலமைச்சர் ஸ்டாலின் காணாமல் போய் விடுவார் என, அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். ஓசூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும்தான் கூட்டணியை நம்பி அரசியல் நடத்தி வருவதாக விமர்சித்தார். ஆனால் அதிமுக கூட்டணியை நம்பவில்லை என்றும், தொண்டர்களை மட்டுமே நம்பி வருவதாகவும் கே.பி முனுசாமி தெரிவித்தார்.