`எத்தனை கட்சி வந்தாலும் போனாலும் நாங்க தான்' - மேடையில் அடித்து சொன்ன கேபி முனுசாமி
தமிழ்நாட்டுக்கு எத்தனையோ அரசியல் கட்சிகள் கட்சிகள் வரலாம் போகலாம், ஆனால் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டுமே போட்டி என அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்தார். ஓசூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், மற்ற கட்சிகள் எல்லாம் அதிமுக, திமுகவோடு கூட்டணி சேரலாம் என்றார். ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு, எத்தனை ஆயிரம் ரூபாய் நம்மிடம் இருந்து பிடுங்குகிறார்கள் என்று சொல்ல வைத்து விட்டால், மக்கள் மனம் மாறும், அப்படி நடந்தால் மக்கள் அதிமுக பக்கம் வருவார்கள் எனவும் கூறினார்.