போலீசும் சேர்ந்து கொடுத்த அதிர்ச்சி - "இனிமே இந்த வார்த்தையை கேட்டா உஷாரா இருங்க.."

Update: 2024-08-13 08:32 GMT

நாகர்கோயிலில், வாடகைக்கு விடுவதாக கூறி கார்களை வாங்கி சென்ற நபர், கார்களுடன் தலைமறைவானதால், பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.நாகர்கோயில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், முன்னணி நிறுவனங்களுக்கு வாடகைக்கு கார் விடுவதாக கூறி, சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் கார்களை வாங்கி சென்றுள்ளார். பேசியபடி மாதந்தோறும் அதிக வாடகை தந்ததால் மகிழ்ச்சி அடைந்த கார்களின் உரிமையாளர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களை மணிகண்டனிடம் வாடகைக்கு ஒப்படைத்தனர். ஓரிரு மாதங்கள் வாடகை சரியாக வந்த நிலையில், பின்னர் வாடகை தொகை வராததால் குழப்பமடைந்த கார் உரிமையாளர்கள் மணிகண்டனிடம் கேட்டப்போது, பல்வேறு காரணங்களை கூறியுள்ளார்.ஒரு கட்டத்தில் கார் உரிமையாளர்கள் வீடு தேடிச் சென்றபோது, மணிகண்டன் கார்களுடன் ஊரை விட்டு தலைமறைவானது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கேட்டதற்கு தாங்கள் வாடகைக்கு கார் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கார் உரிமையாளர்கள், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்போது, மணிகண்டன் மீது ஏற்கெனவே கார் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்து போலீசார் மேலும் அதிர்ச்சி கொடுத்தனர். இதையடுத்து, எப்படியாவது தங்கள் கார்களை மீட்டுத் தரும்படி பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்