கம்பீரமாக சாலையை கடந்த புலி - வைரல் வீடியோ

Update: 2025-04-13 01:56 GMT

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில், புலி கம்பீரமாக சாலையை கடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தெப்பக்காடு பகுதியில் இருந்து மசினகுடி நோக்கி சுற்றுலா பயணிகளின் வாகனம் சென்றுள்ளது. அப்போது, சாலையின் மறுபக்கம் புலியின் உறுமல் சத்தம் கேட்டு, வாகனத்தை நிறுத்தியுள்ளனர். சாலை ஓரமாக சிறிது தூரம் நடந்து வந்த புலி, வாகனம் முன்பாக சாலையைக் கடந்து பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனிடையே, வனவிலங்குகள் நடமாட்டத்தின்போது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்