"அவர்களை காங்கிரசால் மட்டுமே வீழ்த்த முடியும்" -ராகுல்காந்தி அதிரடி பேச்சு
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை காங்கிரசால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மொடாசா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஐ வீழ்த்துவதற்கான பாதை குஜராத் வழியாகவே இருக்கும் என்ற ராகுல் காந்தி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், குஜராத்தில் இருந்து வந்ததாக குறிப்பிட்டார். குஜராத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக இருப்பதாக வேதனை தெரிவித்த ராகுல் காந்தி, கட்சியை வலுப்படுத்துவது கடினமான காரியம் அல்ல என்றும், அதற்காக, எத்தகைய விலை கொடுத்தேனும் செய்து முடிப்போம் என்றும் தெரிவித்தார்.