புதுச்சேரியின் புதிய அமைச்சராக திருமுருகனை நியமனம் செய்ய குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் வரும் 7 ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது. அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து 4 மாதங்களாக பதவி நிரப்பப்படாமல் காலியாக இருந்தது. இந்தநிலையில் புதிய அமைச்சராக நியமனம் செய்ய குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அது தொடர்பான அறிவிப்பு புதுச்சேரி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து திருமுருகன் புதிய அமைச்சராக வரும் 7-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளதாக கறப்படுகிறது.