கடல் கடந்த காதல்..-பிலிப்பைன்ஸ் காதலியை கரம் பிடித்த புதுவை காதலன் -தமிழ் பாரம்பரிய முறைப்படி டும்.

Update: 2024-06-10 12:49 GMT

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராம், B.Tech முடித்துவிட்டு பெல்ஜியத்தில் பணிபுரிந்து வருகிறார். பணிபுரியும் இடத்தில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒபா என்ற பெண்ணும் வெங்கட்ராமும் காதலித்து உள்ளனர். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள பொண்ணு மாரியம்மன் கோவிலில் தமிழர் பாரம்பரிய முறைப்படி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். மணமக்களுக்கு உறவினர்களும் நண்பர்களும் மலர்தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்