நாக்பூரில் கலவரம்.. வன்முறை வெறியாட்டம்.. 144 தடை

Update: 2025-03-18 05:19 GMT

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவுரங்கசீப் கல்லறையை அகற்றக்கோரி இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இரு குழுக்கள் இடையே மோதல் வெடித்தது. நாக்பூரில் உள்ள மஹால் பகுதியில் இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கி கொண்டதோடு, வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க நாக்பூரின் மஹால் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்