அடுத்த நொடி உலகை விட்டுபிரிய போகும் அன்பு தோழி உயிர்.. விபரீதம் அறியாமல் வீடியோ எடுத்த நண்பன்

Update: 2024-06-19 05:18 GMT

மகாராஷ்ட்ராவில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக, கார் ஓட்டிய இளம்பெண், பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் பதறவைத்திருக்கிறது..

பீகார் மாநிலம் ஔரங்காபாத்தில் இருந்து 23 வயதான ஸ்வேதா என்ற இளம்பெண்ணும், அவரது ஆண் நண்பரான சுராஜ் சஞ்சுவும் மகாராஷ்ட்ராவில் உள்ள சுலிபஞ்சன் மலைக்கு சென்றுள்ளனர்...

அங்கு மலைகளின் அழகை ரசித்து பொழுதை கழித்து வர, ஸ்வேதாவிற்கு ஒரு விபரீத ஆசை முளைத்துள்ளது.

இதுவரை கார் ஓட்டி பழகாத ஸ்வேதா, இங்கு கார் ஓட்டி பார்த்தால் என்ன என எண்ணியதோடு அதனை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிரவும் திட்டமிட்டுள்ளார்.

அதன் படி, மலையில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் காரில் இருந்தபடி ஸ்வேதா காத்திருக்க....ஆங்கிள் பார்த்து வீடியோ எடுத்தார் ஆண் நண்பரான சுராஜ்..

காரை ரிவர்ஸ் கியரில் போட்டு மெல்ல மெல்ல ரிவர்ஸில் நகர்த்தி வர...திடீரென அவர் காரை சற்று வேகமாக இயக்கத் தொடங்கினார்...

இதனை கண்டதும் பதறிப்போன ஆண் நண்பர், அவரை நிதானப்படுத்த எச்சரிப்பதற்குள், பின்னால் இருந்த 300 அடி கார் பள்ளத்தில் சரிந்தது....

இதனை சற்றும் எதிர்பாராத ஆண் நண்பர், ஓடி சென்று பார்ப்பதற்குள் தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு கார் பள்ளத்தாக்கில் பாய்ந்தது...

பதறிப்போன ஆண் நண்பர், மீட்பு குழுவுக்கு தகவல் தெரிவித்த நிலையில், சுமார் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின், உருக்குலைந்த நிலையில், கார் கண்டறியப்பட்டது...

அதில் இருந்து ஸ்வேதாவை மீட்டு, மருத்துவமனைக்கு எடுத்து சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்...

விளையாட்டு வினையாகும் என்பதை போல இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தில் இளம்பெண் செய்த செயல் அவரின் உயிரையே பறித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்