மத்திய பிரதேச மாநிலம் போபாலில் யாசகம் எடுக்கவும், தானம் அளிக்கவும் தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மற்றொரு நகரமான இந்தூரில் இந்த தடை அமலில் உள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. யாசகர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது மட்டுமின்றி போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.