"லட்சத்தீவில்..." பட்ஜெட்-ல் வெளிவந்த சூப்பர் நியூஸ் | budget 2024

Update: 2024-02-01 10:17 GMT

லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், 1 கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தி தரப்படும்.சோலார் மின் வசதி ஏற்படுத்தி உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு முதல் 300 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். வடகிழக்கு மாநிலங்களுக்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து வருவதாகவும், அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் பொது, தனியார் துறை பங்களிப்பை அரசு அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா திகழ்வதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். புதிய விமான நிலையங்கள், விமான நிலைய விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 149ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி 2014ம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்துள்ளது - அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும் - அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த போஷன் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்கப்பட உள்ளதாகவும், லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்