ஆடிப்பூர விழா கோலாகலம் - யானை மங்களத்திற்கு 1008 வளையல்களில் நெத்திச்சூட்டி அலங்கரிப்பு

Update: 2024-08-08 04:25 GMT

ஆடிப்பூர விழா கோலாகலம் - யானை மங்களத்திற்கு 1008 வளையல்களில் நெத்திச்சூட்டி அலங்கரிப்பு

கும்பகோணத்தில் 2000 ஆண்டுகள் பழமையான ஆதி கும்பேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

உற்சவர் அம்மனுக்கு இரண்டு லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடிப்பூரத்தை ஒட்டி கோயில் யானை மங்களத்திற்கு 1008 வளையல்களை மாலையாக்கி

நெத்திச்சூட்டியாக அலங்கரிக்கப்பட்டது. யானையை தரிசித்து பக்தர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்