கேரளாவில் குளவி கொட்டியதில் தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முண்டக்கயம் பாக்காணம் பகுதி வனத்தை ஒட்டி அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த 110 வயது மூதாட்டி குஞ்சுபெண், அவரது 78 வயது மகள் தங்கம்மா இருவரும் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தனர். அப்போது காட்டுப்பகுதியில் இருந்து கூட்டமாக வந்த குளவிகள் கொட்டியதில் இருவரும் கதறி துடித்தனர். அலறம் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினரையும் குளவிகள் கொட்டின. இதில் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குஞ்சுபெண், தங்கம்மா இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற இருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.