சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த அந்த 6 பேர் - வளைத்து பிடித்த போலீஸ்

Update: 2024-11-08 08:01 GMT

திரிபுரா மாநிலம் ஜிரானியா ரயில் நிலையத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்... 3 ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. மேலும் பிற மாநிலங்களுக்கு செல்ல ரயிலில் ஏற முயன்ற போது அவர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது... இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்