கை நிறைய சம்பளம்...கலர்ஃபுல் வாழ்க்கை.. ஆனால் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி நஷ்டம்

Update: 2023-08-08 13:29 GMT

 சுற்றிலும் ஐடி நிறுவனங்கள்... கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... கை நிறைய சம்பளம்... கலர்ஃபுல்லான வாழ்க்கை என ஜொலிக்கும் பெங்களூரு நகரத்திற்கு நீண்ட நெடுங்காலமாக பெரும் தலைவலியாக இருந்து வருகிறது அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில் இங்கிலாந்தில் லண்டனுக்கு பிறகு.... உலகிலேயே மோசமான டிராபிக் கொண்ட இரண்டாவது நகரம் பெங்களூரு என்பது தெரியவந்தது.

இங்கு பீக் ஹவர்ஸில் 1 கிலோமீட்டர் தூரம் செல்ல

சுமார் அரை மணி நேரம் ஆவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக மாநில அரசு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் படி அறிவுறுத்தியிருந்தது, மத்திய அரசு.

இதற்கிடையே, பல மாநில அரசுகளின் ஸ்மார்ட் சிட்டி போக்குவரத்து திட்டங்களுக்கான ஆலோசகராக உள்ள ஸ்ரீஹரி குழுவிடம் பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசு கேட்டுக்கொண்டிருந்தது.

அந்த குழுவினர், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் அறிக்கை சமர்ப்பித் துள்ளனர். அந்த அதில்,

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலால் மட்டும் ஆண்டொன்றுக்கு இருபதாயிரம் கோடி நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், நகரத்தில் முழுமையாக செயல்படும் 60 மேம்பாலங்கள் இருந்தபோதிலும்.... போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

அதே வேளையில் பெங்களூருவில் வீட்டு வசதி கல்வி போன்ற அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதும்...

இதன் விளைவாக பெங்களூருவின் மக்கள் தொகை ஒரு கோடியே 45 லட்சமாக அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் சுமார் 1.5 கோடி வாகனங்கள் புழக்கத்தில் உள்ள நிலையில், 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை வசதி போக்குவரத்து தேவை மற்றும் பயணங்களை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆய்வறிக்கையில் நகரின் ரேடியல், வெளிப்புற மற்றும் சூழ்நிலை வளர்ச்சிக்கு ஏற்றவாறு சாலைகளை திட்டமிட்டு அமைக்க வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீஹரி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு டிராபிக்-ஆண்டுக்கு ரூ.20,000 கோடி நஷ்டம்

உலகிலேயே மோசமான டிராபிக்

2 வது இடத்தில் பெங்களூரு

- தொழில்நுட்பன்புணர் டாம்டாம் அறிக்கை

பீக் ஹவர்ஸ்

1கி.மீ தூரம் செல்ல

சுமார் 30 நிமிடங்கள்

பெங்களூருவின் போக்குவரத்து

நெரிசலை குறைப்பது தொடர்பாக

விரிவான திட்ட அறிக்கை

டிராபிக்கால் பெங்களூருவுக்கு

ஆண்டொன்றுக்கு

ரூ.19,725 கோடி நஷ்டம்

நகரத்தில் முழுமையாக செயல்படும்

60 மேம்பாலங்கள் இருந்தபோதிலும்,

போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு

வீட்டு வசதி, கல்வி போன்ற

அனைத்து துறைகளிலும்

பெங்களூரு வளர்ச்சி

பெங்களூருவில்

புழக்கத்தில் இருக்கும்

வாகனங்கள் - 1.5 கோடி

சாலையின் மொத்த நீளம்

ரூ.11,000 கி.மீ -

போதுமானதாக இல்லை

சாலைகளை திட்டமிட்டு

அமைக்க வேண்டியதன்

அவசியம் குறித்து வலியுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்