டெல்லியில் காற்று மாசு ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.
டெல்லியில் காற்றுத் தரக் குறியீடு இன்று அதிகபட்சமாக கர்தவ்யா பாதையில் 391ஆக பதிவாகியது.
எய்ம்ஸ் பகுதியில் 343ஆகவும், பவானாவில் 409ஆகவும், அலிபூரில் 387ஆகவும், ஆனந்த் விஹாரில் 393ஆகவும்,
துவாரகா செக்டர் 8இல் 362ஆகவும், பட்பர் கஞ்ச் 389, RK புரம் 376 மற்றும் வஜீர்பூர் 399ஆகவும் பதிவாகியுள்ளது.
இதனால் மக்கள் ஆஸ்துமா, சுவாசப்பிரச்னை, தலைவலி, கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புக்குள்ளாகினர்.
டெல்லி மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.