தலைநகர் டெல்லியின் முண்ட்கா பகுதியில் 22 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்... இறந்தவர் அமித் என அடையாளம் காணப்பட்டுள்ளார்... இவர் கொள்ளை வழக்கில் சிறையில் இருந்தவர். அமித்தின் கொள்ளை கும்பலுடன் தொடர்புடையவர்கள் இச்சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.