பலாமு பகுதியில் பிரசாரம் செய்த அமித்ஷா, ராகுல் காந்தி பிரசாரங்களில் காட்டும் அரசியலமைப்பு புத்தகத்தின் உண்மை வெளியே தெரிந்துவிட்டது என்றார். உள்ளே வெற்று காகிதங்களை கொண்ட போலி அரசியலமைப்பு புத்தகத்தை ராகுல் காட்டுகிறார் என என்ற அமித்ஷா, காங்கிரஸ் அரசியலமைப்பையும், அம்பேத்கரையும் அவமதித்துவிட்டது என சாடினார். பாட்காவில் பிரசாரம் செய்த அமித்ஷா, ஊழல் செய்த காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர்களை எல்லாம் சிறையில் அடைப்போம், அவர்களிடம் இருந்து பெறும் பணம் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் என்றார். ஹசாரிபாக் பகுதியில் பிரசாரம் செய்தவர், ராம நவமியை அமைதியாக கொண்டாட பாஜகவுக்கு வாக்களியுங்கள் என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார். ஜார்க்கண்டில் வாக்கு வங்கிக்காக 10 % இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரசும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் விரும்புகிறது என்றவர், ஒ.பி.சி., எஸ்.டி., எஸ்.சி. சமூக மக்கள் ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு வழங்க பார்க்கிறார்கள் என்றார். பாஜகவும், பிரதமர் மோடியும் இருக்கும் வரையில் அது நடக்காது எனவும் சூளுரைத்தார்.