காரை நிறுத்த சொன்னதால் ஆத்திரம்... நடுரோட்டில் போலீசை சரமாரியாக அடித்த காங்., நிர்வாகி... அதிர வைக்கும் காட்சி
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் ஸ்ரீராம் சர்க்கிள் பகுதியில் தலைமைக் காவலரைத் தாக்கிய காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டார்... கடந்த 29ஆம் தேதி இரவு தலைமை காவலர் அசோக் என்பவரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எல்லப்பா என்பவர் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பால் பாக்கெட்டுகளை அடுக்கி வைக்கும் கூடையால் தாக்கியுள்ளார். இக்காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், எல்லப்பாவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எல்லப்பா எம்.பி சுரேஷ், மற்றும் எம் எல் ஏ, சிவன்னா ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது.