ஆந்திராவில் 200 கி.மீ தூரம் செல்ல வெறும் 45 நிமிஷம் தான்.. `மிதக்கும் விமானம்..'
இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2020-ம் ஆண்டு சபர்மதி ஆற்றங்கரையில் தொடங்கி வைத்தார். அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தின் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை வரை இந்த விமான சேவை தொடங்கப்பட்டது. இந்திய விமான பயணத்தில், இது ஒரு புதிய சகாப்தமாக பார்க்கப்பட்டது. இந்த சேவையை ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் ஏற்று கொண்டது. 200 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த கடல் விமான பயணத்தின் மூலம், பயண நேரத்தை 45 நிமிடங்களாக குறைக்க முடியும். ஜேம்ஸ் பாண்ட் ஆங்கில படங்களில் மட்டுமே பார்த்திருந்த இந்த கடல் விமானத்தை நேரில் பார்த்த சுற்றுலா பயணிகளுக்கு, பெரும் வியப்பை ஏற்படுத்தியது.