"டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்"...எம்பிகள் சஸ்பெண்ட் அனைத்தும் ரத்து

Update: 2024-01-30 16:20 GMT

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக கூறினார். கடந்த நாடாளுமன்ற தொடரின் போது, எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அனைத்தும், ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவருடன் பேசியுள்ளதாக கூறினார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாளை முதல் சபைக்கு வருவார்கள் என்றும், பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்