இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (29-01-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
பாசறைக்கு திரும்பிய படைகள்
டெல்லியில் குடியரசு தின விழாவின் நிறைவாக முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு...
முப்படைகளின் பேண்ட் வாத்திய குழுவினர் அசத்தல் இசை நிகழ்ச்சி...
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கண்டுகளிப்பு.
"ஆளுநர்களுக்கு இடையே போட்டி"
தன்னை மன்னராக நினைத்து செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி...
மத்திய அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை என்ற ஆளுநரின் விமர்சனத்திற்கு அமைச்சர் ரகுபதி இன்று பதிலடி...
ஊடகங்களில் யாருடைய பெயர் அதிகம் வருகிறது என தமிழ்நாடு, தெலங்கானா, கேரள ஆளுநர்களுக்கு இடையே மறைமுகப் போட்டி எனவும் விமர்சனம்..
ஆளுநர் பயணம் திடீர் ரத்து
புதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று கருப்புக்கொடி போராட்டம்...
சித்தன்னவாசலுக்கு செல்ல இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பயணம் திடீர் ரத்து...
ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாடு
ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு.....
பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு....
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் வரும் 9ஆம் தேதி திமுக மீண்டும் பேச்சுவார்த்தை...
பிப்ரவரி 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் உடனும், 4ம் தேதி மதிமுக உடன் ஆலோசனை என இன்று அறிவிப்பு...
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட திமுகவினர் கடும் எதிர்ப்பு...
"ஒட்டும் இல்லை, உறவும் இல்லை"
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கிடு, தேர்தல் பிரசாரம் குறித்து அதிமுக இன்று ஆலோசனை
பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டம்...
'சங்கி' கெட்டவார்த்தை இல்லை - ரஜினி
'சங்கி' என்பது கெட்டவார்த்தை என மகள் ஐஸ்வர்யா கூறவில்லை
நடிகர் ரஜினிகாந்த் இன்று விளக்கம்...
நாட்டின் நலனில் சமரசம் செய்து கொள்ளாதவர்களே சங்கி என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து...
நாளை அனைத்துக் கட்சி கூட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, நாளை அனைத்துக்கட்சி கூட்டம்...
கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு இன்று அழைப்பு...தகவல்....