குப்பைகளை சேகரித்தது ஓவியமாக வடிவமைத்து விழுப்புணர்வு
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை ஓவியம் போல வடிவமைத்து யோகா கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை ஓவியம் போல வடிவமைத்து யோகா கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும், மன அமைதியைத் தரவல்லது கடல்...ஆனால் இதமான சூழலையும், இயற்கை அழகையும் ரசித்து விட்டு நாம் கடலுக்குப் பரிசாய்த் தருவது என்னவோ குப்பைகளைத் தான்...அவ்வாறு மாமல்லபுரம் கடற்கரையில் வீசப்பட்ட குப்பைகள், கடற்கரையின் அழகையே சிதைத்து விடுகின்றன. இந்நிலையில், சுற்றுச் சூழல் தினமான இன்று, கடற்கரையில் தூக்கி வீசப்படும் கழிவுகளை ஒன்று சேர்த்து ஓவியம் போல் வடிவமைத்து அசத்தியுள்ளனர் யோகா கலைஞர்கள்...