சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவில் குவிந்த கிறிஸ்தவர்கள், சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்....
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏசு உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது
இதே போல், குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் உள்ள புனித கேத்ரின் ஆலயத்தில் ஏசு கிறிஸ்து உயிர்ப்பு நிகழ்வு தத்ரூபமாக காண்பிக்கப்பட்டு, சிறப்பு திருப்பலி நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மின் விளக்குகள் அனைக்கப்பட்டு கிறிஸ்தவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்