திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல திரைப்பட நடிகர் பிரபுதேவா சுவாமி தரிசனம் மேற்கொண்டார். சாமி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வந்திருந்த அவர் விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனத்திற்கு பின் பிரபுதேவாவுக்கு கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பிரசாதங்கள் வழங்கினர். தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பிரபுதேவாவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.