பெண் தயாரிப்பாளருக்கு ஆபாச மிரட்டல்... கோலிவுட்டில் மீண்டும் ஒரு பூகம்பம்
ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழ் நாடு அரசின் திரைப்பட மானிய குழுவில் உறுப்பினர் ராஜேஸ்வரி ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் தன்னை குறித்தும் தனது குடும்பத்தார் பற்றியும் வாட்ஸ் ஆப் குழுக்களில் திண்டுக்கலை சேர்ந்த தயாரிப்பாளர் ஈஸ்வரன் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுப்பதாக கூறியிருந்தார். இந்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த தயாரிப்பாளர் ஈஸ்வரன், மீண்டும் வாட்ஸ்அப் மூலம் ராஜேஸ்வரிக்கு ஆபாச மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக பெண் தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில், ஆதம்பாக்கம் போலீசார், மீண்டும் ஈஸ்வரனை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.