பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் மனு தள்ளுபடி | R.B. Chaudhari | Producer | Super Good Films
கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.பி.சௌத்ரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு நிலம், சென்னை உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பின்படி சித்திக்கா என்ற பெண்ணுக்கு விற்கப்பட்டது. அந்த நிலத்தை ஆர்.பி.சௌத்ரிக்கு பத்திரப்பதிவு செய்து தர பத்திரப்பதிவுத் துறை மறுப்பு தெரிவித்ததால் அவரும், சித்திக்காவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால் இருவரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து, கோயில் நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்ய அனுமதித்து உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று உத்தரவிட்டனர். அந்த நிலத்தை அறநிலையத் துறை 3 மாதங்களில் மீட்க வேண்டும் என்றும், கோயில் நிலங்கள் அபகரிப்பை தடுக்க அரசும், அறங்காவலர்கள் குழுவும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.