உடற்பயிற்சி மேற்கொண்ட போது, எதிர்பாராத விதமாக காயம் அடைந்ததாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். காலில் கட்டு போட்ட படி, சோகமான முகத்துடன் கூடிய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக, தான் நடித்து வரும் படங்களில் இருந்து, இரண்டு நாட்களுக்கு அவர் பிரேக் எடுத்துள்ளார்.