துபாயில் நடைபெறும் துபாய் 24H சீரிஸூக்கான கார் ரேஸில் பங்கேற்பதில் இருந்து நடிகர் அஜித் குமார் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது...
24 எச் கார் பந்தயத்தில் பங்கேற்க, நடிகர் அஜித் பயிற்சி மேற்கொண்டு வந்தார். கார் பந்தய வீரராக மட்டுமன்றி அணி உரிமையாளராகவும் அஜித் களமிறங்கினார். இதற்காக துபாயில் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், பந்தய களத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கார் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விபத்திற்கு பிறகு, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு பந்தய வீரராக அவர் களமிறங்க மாட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜித் பங்கேற்காவிட்டாலும், அவரது அணி பங்கேற்கவுள்ள நிலையில், 414 ரேசிங் நிகழ்வில் மட்டும் அஜித்குமார் பங்கேற்றார். அஜித்தின் இந்த முடிவை துபாய் 24H சீரிஸ் அமைப்பாளர்களால் பாராட்டியுள்ளதாகவும், அஜித் அங்கு இருப்பது போட்டிக்கு கூடுதல் உற்சாகத்தையும் தருவதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.