"கேரளா 4 மணி ஷோ ஓவர், அடுத்து தமிழ்நாட்டுல தான்... திரும்ப திரும்ப பாப்போம்."

Update: 2024-09-05 02:59 GMT

கேரளாவில் நடிகர் விஜயின் கோட் திரைப்படம் வெளியானது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி தொடங்கிய நிலையில், கேரளா மட்டுமின்றி கோவை உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் பாலக்காடுக்கு சென்றனர். பேனர்கள் வைத்தும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகளை தோரணமாக கட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரசிகர்கள், முதல் காட்சி தொடங்குவதற்கு முன்பு பட்டாசு வெடித்தும் மேளதாளத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்