இனி 'ஜெயம் ரவி' என்ற பெயர் வேண்டாம்.. புதுப்பெயர் இதுதான்! - நடிகர் அறிவிப்பு | Jayam Ravi
இனி தான் ரவி மோகன் என்று அழைக்கப்பட வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ள நடிகர் ஜெயம் ரவி, இந்த பெயர் தன் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்லும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளார். 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்நிறுவனம் திறமையாளர்களுக்கும், நல்ல கதைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதோடு, அர்த்தமுள்ள கதைகளை திரைக்கு கொண்டு வர உதவும் என நடிகர் ரவி குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, பிறருக்கு உதவும் வகையில் தனது ரசிகர் மன்றம், 'ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக' மாற்றப்படுவதாக அறிவித்துள்ள அவர், இந்த புதிய தொடக்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.