நாட்டுப்பற்றை அதிகமாக வெளிப்படுத்தக்கூடிய திரைப்படங்களின் தேவை தற்போது இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
55-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் எல்.முருகன், ஓடிடி தளத்திற்கு தணிக்கை கொண்டு வர வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். நாட்டுப்பற்றை போற்றும் திரைப்படங்களை ஊக்குவிக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.