இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (07-07-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-07 16:09 GMT

சென்னையில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்ட பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி...

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி சோதனை...

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 6 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர்...

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் உடலுக்கு இன்று ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பெரம்பூரில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய நிலையில், ஆயிரக்கணக்கானோருடன் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது... தகவல்களை விவரிக்கின்றனர் செய்தியாளர்கள் ராமச்சந்திரன், சமயமணிவண்ணன்...

துரோகத்தின் மறு உருவம் அண்ணாமலை தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பதிலடி கொடுத்துள்ளார். இதனிடையே, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இன்றைய முக்கிய அரசியல் நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

முண்டாசுப்பட்டி படத்தில் வருவது போல குட்டிச்சாத்தான் ஊருக்குள் புகுந்துவிட்டதாக கிராம மக்கள் கோயிலில் தஞ்சமடைந்த நிகழ்வு திருப்பூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல்களை விவரிக்கின்றனர் செய்தியாளர்கள் அருண்குமார் மற்றும் ஜெகதீசன்...

Tags:    

மேலும் செய்திகள்