காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-11-04 00:52 GMT
  • தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுத்த வாகனங்கள்... தேசிய நெடுஞ்சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல்...
  • தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டதாக, பொது மக்கள் குமுறல்... அரசு சிறப்பு பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு... 
  • சென்னை கொளத்தூரில் இன்று பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்... தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்... 
  • கோவையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை நாளை திறந்து வைக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்... மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தகவல்...
  • 2026 சட்டப்பேரவைத் தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்.... மக்கள் விழிப்போடு இருப்பதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
  • தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் ஆளுநருக்கு மறைமுக கண்டனம்... சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்காத தமிழக அரசுக்கும், ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வரும் மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்...
  • த.வெ.க. தலைவர் விஜய்யை விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம்... உத்தமர் போல் எல்லோருக்கும் சாபம் விடாதீர்கள் என்றும் காட்டம்...
  • சிறந்த எம்.பி. என்பதை மக்களுக்கு பிரியங்கா காந்தி நிரூபிப்பார்... வயநாட்டில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி நம்பிக்கை...
  • அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல்.... கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி... வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...
  • தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கர்களின் கனவுகளை மீட்பேன் என டிரம்ப் வாக்குறுதி... அதிபர் ஜோ பைடன் குறித்தும் கடும் விமர்சனம்...
  • பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் சாம்பியன்... இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் ஹம்பர்ட்டை 6க்கு 2, 6க்கு 2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அசத்தல்... 
Tags:    

மேலும் செய்திகள்