மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-06-2024) | 4PM Headlines | Thanthi TV

Update: 2024-06-23 11:15 GMT

நீட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு...

நீட் தேர்வு முறைகேட்டை ஒப்புக் கொண்டு, தேசிய தேர்வு முகமை தலைவர் மாற்றம்...

விஷ சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் தப்பியோட்டம்...

கண்டெய்னரில் 570 கோடி ரூபாய் பிடிபட்ட வழக்கில், சிபிஐ விசாரணை மூலம் தண்டனை பெறப்பட்டதா?...

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 போட்டியில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் மோதல்...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் இதவுஞ்சாவில் டிராக்டர் பந்தயத்தின்போது இளைஞர் உடல் நசுங்கி உயிரிழந்தார். யாருடைய டிராக்டர் வலிமையானது என காட்டுவதற்காக இரு டிராக்டர்களையும் இரும்பு சங்கிலியால் கட்டி 15 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவித்து பந்தயம் நடைபெற்றுள்ளது. டிராக்டர்கள் இரண்டையும் இணைத்து ஓட்டியபோது, ஒரு டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் அந்த டிராக்டரை ஓட்டிய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்