இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-10-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-14 17:59 GMT

கனமழை காரணமாக சென்னை கிண்டியில் இருந்து விமான நிலையம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்...

சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி...


சென்னையில் மழையால் பாதிக்க கூடிய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் படகுகள்...

பட்டினப்பாக்கத்தில் இருந்து மீனவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு நகரும் படகுகள்...


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் செவ்வாய் கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து உத்தரவு...


கடந்த மழையின்போது, கார்கள் அடித்து செல்லப்பட்டதால், மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டதாக வேளச்சேரி பகுதி மக்கள் வேதனை...https://youtu.be/pO1dVmkVZv0

அச்சத்தின் காரணமாகவே பாலத்தின் மீது கார்களை நிறுத்துவதாகவும் விளக்கம்...


கோவை அருகே ரத்தினபுரி சங்கனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்தால் பரபரப்பு...

பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்பு...


வரும் 27ந் தேதி மாநாடு நடக்கும்போது மழை பெய்தால் லட்சக்கணக்கில் வரும் தொண்டர்களுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?...

தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் வழங்கிய விக்கிரவாண்டி காவல்நிலைய போலீசார்..

Tags:    

மேலும் செய்திகள்