- கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரத்து 300 பணியாளர்களை பணி நீக்கம் செய்த ஜூம் நிறுவனம், இம்முறை அதன் தலைவரையே நீக்கியுள்ளது.
- வீடியோ கான்ஃபரன்சிங் தளமான ஜூம், எவ்வித காரணமுமின்றி அதன் தலைவர் Greg Tomb-ஐப் பணி நீக்கம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தொழிலதிபரும் முன்னாள் கூகுள் ஊழியருமான Greg Tomb, 2022 ஜூனில் பதவியேற்றார்.
- அதன் பிறகு நிறுவனத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு Greg Tomb தீவிரமாக பணியாற்றிய நிலையில், தற்போது திடீரென அவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
- வேறு தலைவரை அப்பதவியில் அமர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என்று ஜூம் நிறுவனம் தெரிவித்துள்ளது.