யாருப்பா நீ !... ஜொமேட்டோவில் தினமும் 9 முறை உணவு ஆர்டர்...ஓராண்டில் 3 ஆயிரத்து 330 ஆர்டர்கள்
ஓராண்டில் 3 ஆயிரத்து 330 உணவுகளை வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்துள்ளதாக ஜோமேட்டோ பெருமிதம் தெரிவித்துள்ளது.;
டெல்லியை சேர்ந்த அங்கூர் என்பவர் தினமும் 9 முறை என்ற நிலையில், ஓராண்டில் 3 ஆயிரத்து 330 உணவுகளை ஆர்டர் செய்துள்ளதாக ஜோமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே ஒரே வாடிக்கையாளர் அதிகளவில் உணவை ஆர்டர் செய்தது இதுவே முதல் முறை என்றும், ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சிறந்த உணவுப் பிரியர் என்ற கிரீடம் அங்கூருக்கு வழங்குவதாகவும் ஜொமேட்டோ கூறியுள்ளது. மேலும் இந்த ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் உள்ளதாகவும், நிமிடத்திற்கு 186 பிரியாணி ஆர்டர்களைப் பெற்றதாக ஜொமேட்டோ தெரிவித்துள்ளது. பிரியாணிக்கு பிறகு பீட்சா, மசாலா தோசை, சிக்கன் ஃபிரைடு ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் ஃபிரைடு ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூர் சிக்கன் உள்ளிட்டவைகள் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.