அரசின் திட்டங்கள் குறித்து பொய்யான தகவல் யூடியூபர் கைது- போலீஸ் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த நாகிரெட்டி பாளையத்தில், அரசின் திட்டங்கள் குறித்து பொய்யான தகவலை பரப்பியதாக பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டார். ஜனார்த்தன ரெட்டி என்ற அந்த இளைஞர், "புதிய அறிவிப்புகள் உங்களுக்காக" என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் தனது சேனலில், பிரபல தொலைக்காட்சிகளின் யூடியூப் வீடியோவை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி, அரசின் திட்டங்கள் குறித்து பொய்யான தகவலை பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அளித்த புகாரின்பேரில், ஜனார்த்தன ரெட்டியை சேலையூர் போலீசார் கைது செய்தனர்.