இருசக்கர வாகன உதிரிபாகங்கள் கடை உரிமையாளரை, மதுபோதையில் இளைஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே இள்ளலூர் சாலையில் ஏகாம்பரம் என்பவர், இருசக்கர வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஆயில் விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இங்கு ஆயில் வாங்குவதற்காக வந்த 3 இளைஞர்கள், ஆயில் விலை தொடர்பாக உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் கடை உரிமையாளரை கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றனர்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.