இளைஞர் கொலை! 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் விசாரணை

Update: 2022-09-25 08:18 GMT

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரை சேர்ந்த அண்ணமலை கொலை வழக்கில் இசக்கிராஜா, வீரபுத்திரராஜா, ஆதிமூலம், ஐயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நால்வரும் ஜாமினில் வெளிவந்து, நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த நிலையில், ஐயப்பன் திடீரென மாயமானார். இதையடுத்து சென்னையில் ஆரோக்கிய ஜான்சி என்பவரை திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வருவது தெரியவந்தது. இதற்கிடையில் கடந்த 8 ஆம் தேதி திருச்செந்தூர் நீதிமன்றம், ஐயப்பனை உடனடியாக கைது செய்யும்படி பிடிவாரண்ட் பிறப்பித்தது. சென்னை அருகே பம்மலில் பதுங்கி இருந்த ஐயப்பனை, போலீசார் கைது செய்து திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஐயப்பன் கைதான நிலையில், இந்த கொலை வழக்கு மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கப்பட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்