சென்னை பானி பூரி கடையில் வடமாநில இளைஞர் அடித்து கொலை...பஸ்டாப்பில் கிடந்த உடல் - கதறிய உறவினர்கள்
சென்னை கிண்டியில், வடமாநில இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மடுவன்கரை மசூதி காலனி பகுதி பானி பூரி கடைக்கு, பீகாரை சேர்ந்த இளைஞர் வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், ஏற்கனவே கடையில் வேலை செய்து வந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராகேஷ்-க்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் தாக்கிக் கொண்டுள்ளனர். பின்னர் ராகேஷ், தனது செல்போனை காணவில்லை என கூறி பீகார் இளைஞரை தாக்கவே, அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய ராகேஷை தேடி வருகின்றனர்.