எலி பேஸ்ட்டை சாப்பிட்டு கொண்டே இளம்பெண் அளித்த மரண வாக்குமூலம் - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி
திருக்கோவிலூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் அப்சா. இவர் கடந்தாண்டு தஸ்தகரீர் என்பவரை காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, திருமணமான சில மாதங்களில் தாய் வீட்டுக்கு திரும்பினார் அப்சா. இரண்டு மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை பிறந்த நிலையில், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலைக்கு முன்பாக அப்சா பேசிய வீடியோவும், கடிதம் சிக்கியுள்ளது. அதில், கணவர், மாமனார், மாமியார் உட்பட 7 பேர் வரதட்சனை கொடுமை அளித்ததாகவும், பெண் குழந்தை பெற்ற காரணத்தால் என்னை வீட்டில் சேர்க்க மறுத்து குழந்தையை கொலை செய்யும்படி கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்தும் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமண நடந்து ஓராண்டிற்குள் நடந்த சம்பவம் என்பதால், கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.